நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிபகிஷ்கரிப்புக்களின் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி...
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிபகிஷ்கரிப்புக்களின் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்போது சஜித் பிரேமதாசவிடம் ஊடகவியலாளர்கள் பின்வரும் கேள்விகளை கேட்டிருந்தனர்.
கேள்வி : விசித்திரமான சம்பவம் ஒன்று நேற்று நடந்தது அதாவது புறக் கோட்டையில் உண்ணாவிரதம் இருந்த அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பிரச்சினையை தீர்க்க பல திட்டங்களுடன் நீங்கள் அங்கு சென்றீர்கள். மறுபுறத்தில் அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் வேட்பாளர் அங்கு செல்கின்றார். இதன் உண்மை தன்மை என்ன?
சஜித் : அடுத்த பிரதமர் அல்ல, மஹிந்த என்ற பெயரை குறிப்பிடுங்கள்.
கேள்வி : சரி சேர் நாம் செல்கின்றோம் என கூறி புறப்பட்டனர். தொடர்சியாக நடைபெற்றது என்ன?
சஜித் : உங்களுக்கு அதற்கான பதில் தெரியும். அதாவது தொடரும் பணிபகிஷ்கரிப்பின் மூல காரணர் யார் என்பது இதன் ஊடாக நேற்று தெரியவந்தது.
கேள்வி : அப்படியானால் இந்த தொடர் பணிபகிஷ்கரிப்புக்கு காரணமானவர் மஹிந்த ராஜபக்ஷ என்றா கூறுகின்றீர்கள்?
சஜித் : மூளை இருந்தால் புரியும். அதைதான் நான் அடிக்கடி சொன்னேன்.
கேள்வி : பிரதமராக அவரை பெயரிடுவீர்களா என்ற கேள்விக்கு சரியான பதிலை நீங்கள் கூற மறுப்பதேன்?
சஜித் : எங்கள் எதிரியிடம் இதுபோன்ற கேள்விகளை நீங்கள் கேட்க முடியாது என்பது எனக்குத் தெரியும். அவர் வேறு. நான் வேறு. ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் தெரிவு இடம்பெறாது புதிய அமைச்சரவை தெரிவும் இடம்பெறாது.
கேள்வி : உங்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட பின்னரும் ஏன் நிபந்தனைகள்?
சஜித் : நிபந்தனைகள் குறித்து போலியாக கேட்காதீர்கள் நான் அப்படிச் சொல்லவில்லை. உங்கள் வேலை இதைப் பொறுத்தது என்பதை கூறுகின்றேன். பயப்பட வேண்டாம். வேலையின்மைக்கான வரிசை நீடித்தால் நான் ஒரு தொழிலை தருகின்றேன்.
இதேவேளை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா, கோட்டாபய ராஜபக்ஷவை நீதிமன்ற தீர்ப்புகளின் ஊடாக தோற்கடிக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது சிரந்தி ராஜபக்ஷவை தோற்கடித்து சஜித் பிரேமதாச வெற்றி பெறுவதை விட கோட்டாபயவே தங்களுக்கு அவசியம் என கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐ.தே.கட்சியில் உள்ளவர்களுக்கும் அரை காற்சட்டையை அணிவிப்பதற்கு சஜித் பிரேமதாச எதிர்பார்பதாக கூறினார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.நாவின்ன சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக கூறினார் ஆனால் ஆதரவளிக்க முன்னர் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா : மறுபடியும் நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவீர்களா?
எஸ்.பீ.நாவின்ன : வாழக்கையில் ஒருபோதும் வர மாட்டேன்.



ليست هناك تعليقات