ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதன் மூலம் எதிர்வரும் 20, 25 ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை நிலை நிறுத்த முடியும் என அமைச்ச...
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதன் மூலம் எதிர்வரும் 20, 25 ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை நிலை நிறுத்த முடியும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்காக தாமும் ஐக்கிய தேசியக் கட்சியின் குடும்பத்துடன் இணைந்து பயணிக்க தயார் எனவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.



No comments