Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

புத்தூர் சந்தியை வந்தடைந்த நடைபயணம்! நாளை நாவற்குழியில் அணிதிரள அழைப்பு!

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தில் நடத்தப்படும் நடைபயணம் தற்போது யாழ் தென்மராட்சி புத்தூர் சந்த...


ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தில் நடத்தப்படும் நடைபயணம் தற்போது யாழ் தென்மராட்சி புத்தூர் சந்தியை வந்தடைந்துள்ளது.

தமிழ் மக்களின் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், தியாகி திலீபன் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டு வவுகியாவில் இருந்து யாழை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நடைபயணம் தற்போது தென்மராட்சி புத்தூர் சந்தியை வந்தடைந்துள்ள நிலையில் தியாக தீபம் திலீபன் நினைவிலான இறுதிநாள் நடைபயணத்தில் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் நாளை (26) வியாழக்கிழமை காலை 8 மணிக்கு நாவற்குழி சந்தியில் ஒன்று கூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Latest Articles