க.பொ.த. உயர்தர உயிரியல் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்கான பரீட்சை எந்தவித அநீதியும் இன்றி நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நா...
க.பொ.த. உயர்தர உயிரியல் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்கான பரீட்சை எந்தவித அநீதியும் இன்றி நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித, கல்வி அமைச்சுக்கு உறுதிபட தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தர உயிரியல் பாடத்தில் தோற்றிய சிங்கள மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்து ஆதாரமற்றது என பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கூறுகின்றனர்.
இலவச மற்றும் சுதந்திர சிந்தனையுள்ள மாணவர்களை நாட்டுக்கு வழங்குவதே கல்வியின் நோக்கமாகும்.
அதற்கு பயம் மற்றும் சந்தேகம் இல்லாமல் பிள்ளைகளுக்கு இலவச கல்வியை வழங்குவது அறிவார்ந்த அரசியல்வாதியின் கடமையும் பொறுப்புமாகும்.
எனவே, அந்த கடமையையும் பொறுப்பையும் புறக்கணிப்பது குறுகிய அரசியல் நோக்கங்களை நோக்கமாகக் கொண்டது எனவும் அந்த செயற்பாடு பிள்ளைகளுக்கு எதிர்காலம் தொடர்பில் அச்சமுட்டுவதாகும். அவர்களை இருண்ட யுகத்திற்கு செல்வதுமாகும்.
இது தொடர்பில் தெளிவுப்படுத்த தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டி.ஏ.ஆர்.ஜே. குணசேகர உயர்தர உயிரியல் ஆசிரியர் வழிகாட்டலின் அனைத்து சிங்கள மற்றும் தமிழ் நடுத்தர நகல்களையும் 2018 பெப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பியுள்ளார்.
மேலும் 11.06.2018 முதல் 31.07.2018 ஆம் திகதி வரை நடைபெற்ற சகல ஆசிரியர் பயிற்சி பட்டறைகளில் உயிரியல் ஆசிரியரின் வழிகாட்டுதல் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆசிரியர் வழிகாட்டுதல்கள் தேசிய கல்வி நிறுவனத்தினால் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி மூலங்களில் வெளியிடப்பட்டு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் குறித்த வழிகாட்டுதல்கள் அச்சிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பியதாகவும் கல்வி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனவே, உயிரியல் பரிந்துரைக் குழுவுக்கு தலைமை தாங்கிய அதிகாரி உயிரியல் பாடத்தில் பட்டம் பெற்றவர் எனவும் இந்த முறை மாத்திரம் அல்லாது கடந்த முறையும் உயிரியல் பாடத்திட்டத்தின் திருத்தத்திற்கு தலைமை தாங்கியவர் எனவும் மொழிபெயர்ப்பும் தேர்ச்சி பெற்றவர்களினால் முன்னெடுக்கப்பட்டதாகவும் தேசிய கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.



No comments