Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஒய்வு குறித்து மனம் திறந்தார் கிறிஸ்ரியானோ ரொனால்டோ!

உலகளவில் அதிகளவான ரசிகர்களை கொண்ட கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கால்பந்த...


உலகளவில் அதிகளவான ரசிகர்களை கொண்ட கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட துறையில் பல சாதனைகளை படைத்த போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ .

ரொனால்டோவிடம் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரொனால்டோ ….....

ஓய்வு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒருவேளை நான் அடுத்த வருடம் எனது கால்பந்தாட்ட வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால் என்னால் 40 அல்லது 41 வயது வரை கூட விளையாட முடியும் என்று ரொனால்டோ கூறினார்.

ரொனால்டாவின் இந்த முடிவால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ரொனால்டோ கழக ரீதியாக தற்போது யுவன்ரஸ் அணிக்காக ஆடி வருவதுடன், தற்போது இவருக்கு 34 வயது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments

Latest Articles