Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வெள்ளத்தில் மூழ்கும் ஸ்ரீலங்காவின் முக்கிய நிலையம்! பொறுப்பதிகாரி விடுத்துள்ள அறிவிப்பு!

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் நேற்றைய தினம் முதல் இன்று காலை 8.30 வரையான 24 மணித்தியாலங்களில், ...


கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் நேற்றைய தினம் முதல் இன்று காலை 8.30 வரையான 24 மணித்தியாலங்களில், 272.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த மழையுடனான வானிலை நிலவிய போதிலும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக, விமான நிலைய கடமை நேரப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்தை அண்மித்துள்ள தண்டுகம் ஓயா ஆறு பெருக்கெடுத்துள்ளதால் அந்த பகுதியில் வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வௌிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள், தங்கள் விமானம் புறப்படுவதற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்பாக, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ليست هناك تعليقات

Latest Articles