அண்மையில் தென்னிந்திய பிரபல நகைச்சுவை நடிகர் சதீஸ் இலங்கைக்கு வந்திருந்தார். அவர் ஈழத்தில் வல்லைவெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப்...
அண்மையில் தென்னிந்திய பிரபல நகைச்சுவை நடிகர் சதீஸ் இலங்கைக்கு வந்திருந்தார். அவர் ஈழத்தில் வல்லைவெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை சென்று பார்வையிட்டிருந்தார்.
அத்துடன் நகைச்சுவை நடிகர் சதீஸ் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில் சதீஸ் வீட்டை பார்வையிட்டமை குறித்து வார இதழ் பத்திரிகை ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ளார்.
அதில்..
நான் இலங்கை வந்திருந்த போது பிரபாகரன் ஐயா வாழ்ந்த வீட்டிற்கு சென்று பார்த்தேன். என்னால் அழுகையை தவிர்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இலங்கையை பரந்த தமிழகம் என்றே கூறவேண்டும். என் தொப்புள்கொடி உறவுகள் அங்குள்ளனர். அண்மையில் இலங்கைக்கு சென்று 4 நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தேன்.
வவுனியா, கிளிநொச்சி, வல்வெட்டித்துறை என பல இடங்களை பார்வையிட்டேன். முக்கியமாக அதிமேதகு பிரபாகரன் ஐயா வாழ்ந்த வீட்டிற்கு சென்றேன். எவ்வளவு பெரிய மேதை வாழ்ந்த இடம் அது. என்னால் அழுகையை தவிர்க்க முடியவில்லை.
இலங்கை சென்றமை நான் என் வீட்டிற்கு சென்று வந்தது போன்றது. இலங்கை தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். மறுபடியும் கண்டிப்பாக செல்லவேண்டும். ஈழம் என்னை நெகிழவைத்தது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





ليست هناك تعليقات