Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அரசனுக்கு நிகரான அந்தஸ்துடைய அதி யோகம்

அதி யோகத்தினால் இந்த ஜாதகர்கள் இப்பூமியில் அரசன் அல்லது அரசனுக்கு நிகரான அந்தஸ்துடைய குடும்பத்தில் பிறப்பார்கள். ஒருவரது ஜாதகத்தில் சந...

அதி யோகத்தினால் இந்த ஜாதகர்கள் இப்பூமியில் அரசன் அல்லது அரசனுக்கு நிகரான அந்தஸ்துடைய குடும்பத்தில் பிறப்பார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரனுக்கு 6,7,8 ஆகிய இடங்களில் சுபக்கிரகங்கள் அமர்ந்துள்ள நிலையில் ‘அதி யோகம்’ ஏற்படுகிறது. 6,8 ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானங்களாக இருந்தாலும், அவை, உபஜெயம், பணபரம் ஆகிய ஸ்தானங் களாகவும் உள்ளன. 

இந்த யோகம் சந்திரனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரனுக்கு அதாவது ஒருவரது ஜென்ம ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்கும் கிரகம், சந்திரன் நின்ற வீட்டிற்கு 12-ம் வீட்டையும், சந்திரனுக்கு 7-ம் வீட்டில் நிற்கும் கிரகம் சந்திரனை நேர் 7-வது பார்வையாகவும், சந்திரனுக்கு 8-ம் வீட்டில் நிற்கும் கிரகம், சந்திரன் நின்ற வீட்டிற்கு 2-ம் வீட்டையும் பார்வை செய்யும் அடிப்படையில் இந்த யோகம் உருவாகிறது.

அதியோகமானது, சுப அதியோகம், பாப அதியோகம் மற்றும் சம அதியோகம் என்று மூன்று வகையாக உள்ளது.

சுப அதியோகம் என்பது ஏழாவது வீட்டில் மூன்று சுபக் கிரகங்கள் அமர்ந்திருப்பதாகும். பாப அதியோகம் என்பது எட்டாவது வீட்டில் மூன்று சுபக் கிரகங்கள் அமர்ந்திருப்பதாகும். 

சம அதியோகம் என்பது சந்திரனுக்கு ஆறாவது வீட்டில் மூன்று கிரகங்களும் இருப்பது, ஆறு மற்றும் எட்டு ஆகிய வீடுகளில் இருப்பது, அல்லது ஆறு, ஏழு மற்றும் எட்டு ஆகிய வீடுகளில் பரவலாக அமர்ந்திருப்பது ஆகும்.

அந்த மூன்று சுபக் கிரகங்களுக்கும் ஆறு, ஏழு மற்றும் எட்டு ஆகிய வீடுகள் ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் ஆகிய நிலைகளுக்கு ஏற்ப சுப பலன்கள் நடக்கும்.

இந்த யோகத்தினால் இந்த ஜாதகர்கள் இப்பூமியில் அரசன் அல்லது அரசனுக்கு நிகரான அந்தஸ்துடைய குடும்பத்தில் பிறப்பார்கள். எல்லோரும் இவர்களைத் தேடி வந்து, தங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களுக்கான உதவி கேட்கும் நிலையில் இருப்பார்கள். 

இவர்கள் ஏதேனும் அரசாங்க உத்யோகங்களில் இருப்பார்களேயானால் அதில், அதிகாரம் கொண்ட பதவிகளில் இருப்பார்கள். அரண்மனை போன்ற வீடு, நவீன விலை உயர்ந்த வாகனங்கள், வெளிநாடுகளுக்கு செல்லுவது ஆகிய நன்மைகளைஅதியோகம் அளிக்கிறது.


ليست هناك تعليقات

Latest Articles