பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் உடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 16 வயதான சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட...
பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் உடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 16 வயதான சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், சஹ்ரான் ஹாசிம் உடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நௌபர் மௌலவியின் மகன் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர் அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த அனைவரும் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments