அழிவு யுத்தத்திற்கு முகம் கொடுத்த எமது மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்ததுடன் அரசியலுரிமையையும் ...
அழிவு யுத்தத்திற்கு முகம் கொடுத்த எமது மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்ததுடன் அரசியலுரிமையையும் வென்றெடுத்துக் கொடுப்பதற்காகவே நாம் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது பிரதேச மக்களிடம் பல தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் அவை முழுமையாகப் பெற்றுக் கொடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.
ஆனால் அத்தகைய வறிய நிலையில் வாழும் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் எதுவிதமான தேவைப்பாடுகளும் இதுவரை பெற்றுக் கொடுக்கப்படாதிருப்பது அவர்களது கையாலாகாத்தனமாகவே பார்க்கப்படுகிறது.
வெறுமனே தேர்தல் வெற்றிக்காகவும் அரசியல் சுகபோகங்களுக்காகவும் அரசியல் செய்பவர்கள் நாங்களல்ல. நாங்கள் மக்களின் வலிகளை உணர்ந்தவர்கள்.
அந்தவகையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவே நாம் அர்ப்பணிப்புடன் அரசியல் செய்து வருகின்றோம்.
இந்தப் பகுதி ஒரு மீள்குடியேற்றப்பட்ட பகுதியாகக் காணப்படுவதால் இப்பகுதி மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு நாளாந்தம் முகம்கொடுத்து வருகின்றனர்.
இவற்றிற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நாம் முடியுமானவரை முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.
அந்தவகையில் மக்களுக்காகவே எமது அரசியல் பயணம் முன்னெடுக்கப்படுவதால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாது அரசியலுரிமைக்கான பிரச்சினைக்கும் எம்மால் தீர்வு பெற்றுத் தரமுடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
ஆனால் அதற்கான அரசியல் பலம் எம்மிடம் போதாதிருக்கின்றது. இனிவரும் காலங்களில் மக்கள் எம்மிடம் அரசியல் பலத்தைத் தருவார்களேயானால் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை மிகவிரைவில் எம்மால் பெற்றுத் தரமுடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.



No comments