யாழ்.கொக்குவில் - பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்துக்குள் புகுந்த இனந்தெரியாத ரவுடிக் கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து...
யாழ்.கொக்குவில் - பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்துக்குள் புகுந்த இனந்தெரியாத ரவுடிக் கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் உணவக உரிமையாளர் காயமடைந்ததுடன், அங்கிருந்த பெறுமதியான பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
காங்கேசன்துறை வீதி கொக்குவில் - பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் நேற்று இரவு 9 மணியளவில் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை, கண்ணாடி அலுமாரிகளை அடித்து நொருக்கியுள்ளது.
அத்துடன் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீதும் அக் கும்பல் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் உணவக உரிமையாளர் தலையில் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் இடத்துக்கு வந்த பொலிஸார், குறித்த உணவகத்துக்குச் சென்று தாக்குதல் நடத்திவிட்டு அருகில் உள்ள ஒரு இடத்தில் மறைந்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.




ليست هناك تعليقات