Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இன்றைய ராசி பலன் - 17.08.2019

மேஷம் நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் பெருகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக் களைப் பெற...



மேஷம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் பெருகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக் களைப் பெறும் வாய்ப்பு உண்டு. பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். 

ரிஷபம்

நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை மாறவும், எதிர்கால வளர்ச்சிக்கும் திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும்.   

மிதுனம்

வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் தேடிவரும். இடையூறாக இருந்தவர்கள்  விலகுவர். தொழிலில் நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும்.   

கடகம்

அலைச்சல் அதிகரித்து ஆதாயம் குறையும் நாள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும். எதிர்பார்த்துச் செய்த காரியமொன்றில் இடையூறுகள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.   

சிம்மம்

அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலை யிலேயே வரும். நல்ல மனிதர்களின் நட்பு கிட்டும். இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா? என்ற மனக்குழப்பம் அகலும். 

கன்னி

பாக்கிகள் வசூலாகும் நாள். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடரும். பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தேக நலன் கருதி ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. 

துலாம்

வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப் படும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். தூரதேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும்.     

விருச்சகம்

பாராட்டும், புகழும் கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு. நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர் கள். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.   

தனுசு

விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்தி ணைவர். வாங்கல் – கொடுக்கல்களில் கவனம் தேவை. சகோதர ஒற்றுமை பலப் படும். தொழிலில் இருந்த மந்தநிலை மாறும்.

மகரம்

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பணவரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். நண்பர்கள் நல்ல செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். உடன்பிறப்புக்களின்   உதவி கிடைக்கும்.

கும்பம்

சந்தோ‌ஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் அதற் கேற்ற ஆதாயமும் கிடைக்கும். குடும்பப் பெரியவர்களின்  ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.   

மீனம்

விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்யோகத்தில் விருப்ப ஓய்வு பெறுவது பற்றி யோசிப்பீர்கள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.    

No comments

Latest Articles