Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பிறந்த தினத்தில் உயிர்பிரிந்த சோகம்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்பு சந்தியில் இன்று வியாழக்கிழமை (6) மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்...


மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்பு சந்தியில் இன்று வியாழக்கிழமை (6) மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த இன்றைய தினம் வியாழக்கிழமை(6) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் எ.அசோக்குமார் (வயது-25) என தெரியவந்துள்ளது.

மன்னாரில் இருந்து தலைமன்னார் வீதியூடாக குறித்த இளைஞரும், பிறிதொரு நபரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, குறித்த வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனத்துடன் புதுக்குடியிருப்பு பகுதியில் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (வயது-25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பின்னால் அமர்ந்து சென்ற காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த செல்லக்குட்டி விக்கி (வயது-32) என்பவர் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பட்டா ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات

Latest Articles