Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பொலிஸ் அதிகாரி! விசாரணைகள் ஆரம்பம்!

கம்பளை பொலிஸ் நிலையத்தின் பிரஜா சேவா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவர் கம்பளை பிரதான வீதியில் அ...


கம்பளை பொலிஸ் நிலையத்தின் பிரஜா சேவா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இவர் கம்பளை பிரதான வீதியில் அமைந்துள்ள தபாலகத்துக்கு அருகில் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் நடைபெறவிருந்த விசேட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிகாலை நான்கு மணியளவில் பொலிஸ் விடுதியிலிருந்து வெளியேறியிருந்த நிலையிலேயேசடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கம்பளை தெபிலிகல வரக்காவ கிராமத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.ஐ தர்ம சேன (53) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் மரணம் குறித்த விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ليست هناك تعليقات

Latest Articles