உயிர்காப்பு சாதனங்கள் கழற்றப்பட்டு இயற்கை மரணத்துக்குள் தள்ளப்பட்ட வன்சென்ட் லம்பேர்ட்டுக்கு பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதிந...
உயிர்காப்பு சாதனங்கள் கழற்றப்பட்டு இயற்கை மரணத்துக்குள் தள்ளப்பட்ட வன்சென்ட் லம்பேர்ட்டுக்கு பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதிநேர உத்தரவால் இன்று மீண்டும் உயிர் காப்பு கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
வன்சென்ட் லம்பேர்டின் பெற்றோர் மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் இன் இறுதிநேர கோரிக்கைகளுக்கு மத்தியில் வன்சென்ட் லம்பேர்ட்டின் உயிர் காப்பு கருவிகள் நேற்றுக்காலை முதல் நீக்கப்பட்டன
ஆயினும் லம்பேட்டின் பெற்றோர் இறுதிவரை நீதித்துறையில் போராடியதன் அடிப்படையில் பரிஸ் மேன்முறை யீட்டு நீதிமன்றம் அவருக்குரிய உயிர்காப்பு சாதனங்களை பொருத்தும் படி நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தது.
பிரான்சில் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக கருணை கொலை குறித்த வாதப்பிரதி வாதங்களின் மையமாக இருந்த வன்சென்ட் லம்பேர்ட் இந்தவாரத்தில் உயிர்துறக்கலாம் என்ற துன்பியல் நிலை இருந்த நிலையில் இப்போது மீண்டும் அவருக்குரிய உயிர்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
42 வயதான வன்சென்ட் லம்பேர்ட் கடந்த 2008 ஆம்ஆண்டில்; இடம்பெற்ற ஒரு உந்துருளி விபத்துக்குப்பின்னர் உடல்உணர்வற்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக இருந்துவருகிறார்.
அவரை இயற்கையாக மரணமடைய வைக்க அவரது மனைவி விரும்புகிறார். ஆனால் இதற்கு லம்பேட்டின் பெற்றோர் எதிர்புத்தெரிவித்ததால் இந்தவிடயம் கடந்த 5 வருடங்களாக சட்டப்பிரச்சனையாக பெரும் இழுபறி நிலையில் உள்ளது.
இறுதியில் அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்கலாம் என பிரெஞ்சு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஐரோப்பாவின் உயர்நீதி மன்றமும் உறுதி செய்தது. ஆனால் இப்போது பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிலைமையை மாற்றியுள்ளது.



ليست هناك تعليقات