இந்தோனேசியாவின் தேசிய விமானமான கருடா நிறுவனம் 49 போயிங் 737 MAX 8 ரக விமானங்களின் முன்பதிவை ரத்துசெய்துள்ளது.அதன் மதிப்பு 4.9 பில்லியன் டொல...
இந்தோனேசியாவின் தேசிய விமானமான கருடா நிறுவனம் 49 போயிங் 737 MAX 8 ரக விமானங்களின் முன்பதிவை ரத்துசெய்துள்ளது.அதன் மதிப்பு 4.9 பில்லியன் டொலர் என்று கூறப்பட்டுள்ளது
விபத்துக்குள்ளான எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானமும் லயன் ஏர் விமானமும 737 MAX 8 ரகத்தைச் சேர்ந்தவை.விபத்துச் சம்பவங்களைத் தொடர்ந்து கருடா நிறுவனம் அந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கான கடிதம் போயிங் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இதன் பேச்சாளர் Ikhsan Rosan தெரிவித்துள்ளார்.கருடா விமானப் பயணிகள் அந்த ரக விமானங்களின்மீது நம்பிக்கையை இழந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இது பெரும் அடியாக போயிங் நிறுவனத்துக்கு விழுந்துள்ளது. எவ்வாறாயினும் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள போயிங் 737 மகஸ் 8 சகல நாட்டு விமானங்களின் மென்பொருள் தரவுகள் 10 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும் என்று போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.


No comments