Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் நடந்த பயங்கர சம்பவம்; எரி காயங்களுடன் ஓடி வந்த நபர்: அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் கையி...


யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் கையில் எரிகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்

அத்துடன், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனம், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றது. செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது-53) என்பவரே கையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த வாரம் யாழ் நகரில் உள்ள கராஜ் உரிமையாளரின் வீடொன்றின் மீது இதே பாணியில் பெற்றோல் குண்டு வீசப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles