Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

விரைவில் மாகாண சபைத் தேர்தல்!! - Queenlanka News

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக சட்ட வரைவு ஒன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 25 வீத பெண்களின் பிரத...

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக சட்ட வரைவு ஒன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவையுள்ளது. ஆகவே இவ்வாறானதொரு சட்ட வரைவை உருவாக்கி தேர்தலை நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Latest Articles