ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். அன்றில...
ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். அன்றில் இருந்து இன்று வரை இலங்கை அரசியலில் பரபரப்பான சூழ்நிலையே காணப்பட்டு வருகின்றது.
கடந்த 26 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த அமரவீர நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகி சிறு மணிநேரத்தில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஜனாதிபதி நியமித்தார்.
இதன் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் 16 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக புதிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொணடனர்.
குறிப்பாக பியசேன கமகே, வடிவேல் சுரேஷ், வியாழேந்திரன் உட்பட்டவர்கள் கட்சி தாவியிருந்தனர்.
இதன் காரணமாக 113 என்ற பெரும்பானமையை நிரூபிக்க இரு கட்சிகளும் பல முயற்சிகளை எடுத்தது. இதன் போதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பேரம் பேசப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
அதுமட்டுமன்றி புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டவர்களையும் இணைத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என நியமனம் வழங்கப்பட்டது.
அதனை அடுத்து இம் மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதாக விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி விடுத்திருந்தார்.
இதன் பின்னர் விசேட உயிரையாற்றிய ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்ட பிரச்சினை, சபாநாயகரின் ஓர் கட்சி சார்ந்த நடவடிக்கை ரணில் விக்கிரமசிங்கவின் செயப்பாடுகள் காரணமாகவே நாடாளுமன்றத்தை கலைத்ததாக கூறினார்.
மேலும், இதனை தொடர்ந்து உயர் நீதிமன்றில் 12 அடைப்படை உரிமை மீறல் மனுக்களும், 5 ஆட்சேபனை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி இரு நாட்கள் விசாரணையின் பின்னர் நேற்று நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு 17 ஆம் திகதி வரை இடைக்கல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஜனாதிபதி ஏற்கனவே விடுத்த வர்த்தமானி அறிவித்தலில் பிரகாரம் நாடாளுமன்றம் இன்று கூட்டப்பட்டு, பிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை 122 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதனை அடுத்து மஹிந்த தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இறுதி தீர்மானத்தை ஜனாதிபதியே எடுப்பர் எனவும் கூறிவந்தனர்.
இருப்பினும் இன்று மதியம் குறித்த பிரேரணை முடிவு தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்.
இருப்பினும் குறித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாளை சபாநாயகர் உட்பட கட்சி தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் நாளை முக்கிய அறிவிப்பையும் மஹிந்த ராஜபக்ச விடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள்ள நிலையில் தொடர்ந்து வரும் நாட்களில் நாட்டில் என்ன இடம்பெறலாம் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

No comments