ஆற்றினை அகலபடுத்துவதாக கோரி கேசல் கமுவ ஓயாவில் மாணிக்ககல் அகல முயற்சித்த சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. காசல்ரீ நீர் தேக்கத்திற்...
ஆற்றினை அகலபடுத்துவதாக கோரி கேசல் கமுவ ஓயாவில் மாணிக்ககல் அகல முயற்சித்த சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கேசல் கமுவ ஓயாவிற்கு அருகாமையில் உள்ள கிளை ஆறு ஒன்றினை அகலபடுத்தும் நோக்கில் கால்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கேசல் கமுவ ஓயா ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வினை மேற்கொள்ள முற்பட்ட சம்பவம் ஒன்று 03.11.2018 சனிகிழமை முற்பகல் 11.30மணி அளவில் முறியடிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள கிளை ஆறு ஒன்றினை அகலபடுத்தும் நோக்கில் அம்பகமு பிரதேச செயலாளர் காரியாலயத்தின் ஊடாக வழங்கபட்ட ஒப்பந்த அடிப்படையிலான வேலைத்திட்டத்தினை ஹட்டன் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பெக்கோ இயந்திரத்தினை கொண்டு கிளை ஆற்றின் நடுபகுதியில் இருந்து ஆற்றினை அகலபடுத்துவதாக கூறி கேசல்கமுவ ஓயா ஆற்றின் அருகாமையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மூங்கில்கள் என்பன அழிக்கபட்டு மாணிக்ககல் அகழ்வினை மேற்கொள்ள முற்பட்டதாக பொதுமக்கள குற்றம் சுமத்துகின்றனர்.
இதனால் கேசல்கமுவ ஓயாவில் மண் நிறைந்து கால்ரீ நீர் தேக்கத்திற்கு அள்ளுண்டு சென்றுள்ளதோடு பாரிய மூங்கில்கள் சரிக்கபட்டு கேசல்கமுவ ஓயாவில் வீசப்பட்டு கிடந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உபதலைவரும் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு சென்ற பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனராஜ் இந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஆற்றினை அகலபடுத்தும் நடவடிக்கையினை தற்காலிகமாக நிறுத்துவமாறு அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.பி.டி.சுமனசேகர அவர்களிடம் கேட்டு கொண்டதற்க்கு இணங்க தற்பொழுது ஆற்றினை அகலபடுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தபட்டுள்ளதாக முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவிதார்.
இதேவேளை குறித்த ஆற்றினை அகலபடுத்தும் நடவடிக்கையினை வேறு ஒரு நபருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்பட்டு அவரின் ஊடாக குறித்த ஆற்றின் அகலபடுத்தும் பணிகள் மேற்கொள்ளபடும் என அம்பகமு பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.



ليست هناك تعليقات