Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுகிறோம் - சரண்டர் ஆன சர்கார் தயாரிப்பாளர்.!

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும், தமிழக அரச...




நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும், தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் முரணான காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை நீக்காவிட்டால் பகீரத விளைவுகளை படக்குழு எதிர்கொள்ள நேரிடுமென அதிமுக எச்சரித்திருந்த நிலையில் சர்கார் படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிடுகிறோம் என தெரிவித்துள்ளது அப்படத்தின் தயாரிப்பு தரப்பான சன் குழுமம்.

அரசினது நலத்திட்டங்கள் குறித்து புரிதல் ஏதுமின்றி அவை குறித்து விமர்சித்துள்ள சர்கார் படக்குழு அவர்களாகவே குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கிவிட்டால் நல்லது என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்திருந்த நிலையிலேயே படக்குழு சர்ச்சைக்குரியா காட்சிகளை நீக்கிவிடுகிறோம் என தெரிவித்துள்ளது.

முன்னதாக, அரசு குறித்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் விமர்சிக்கும் காட்சிகளை நாங்களும் திரையிட விரும்பவில்லை என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இன்று மீண்டும் சென்சாருக்கு அனுப்ப பட்டுள்ள சர்கார் திரைப்படம் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின் திரையிடப்படுமென தெரிகிறது.

No comments

Latest Articles