Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

குழப்பகர அரசியலின் மத்தியில் கூடுகிறது செயற் குழு!

ஸ்ரீலங்காவின் தற்போதைய குழப்பகரமான அரசியல் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூடவுள்ளது. ...



ஸ்ரீலங்காவின் தற்போதைய குழப்பகரமான அரசியல் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூடவுள்ளது.

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதமராக முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஸபக்ஸவை மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நியமித்ததை அடுத்து அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய அசாங்கத்தின் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியி்ன தலைவர் ரணில் விக்கிரமசிங்க தானே நாட்டின் பிரதமர் என கூறிவரும் நிலையில் அவரை அலரி மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மகிந்தவாதிகள் காலக்கெடு விதித்திருந்தனர்.

இந்த நிலையில், மைத்திரி - மஹிந்த அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிகப்பட்ட மஹிந்த ராஸபக்ஷ, கடந்த திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.

அதனையடுத்து, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ரணில் விக்கிரமைசிங்கவுக்கு உள்ளதாகவும், மைத்திரி - மஹிந்த அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஸபக்ஷ நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றம் சுமத்தினர்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் பொரும்பான்மையை மைத்திரி - மஹிந்த அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிகப்பட்ட மஹிந்த ராஸபக்ஷ நிரூபிக்க வேண்டும். என்றும் அதுவரை அலரி மாளிகையை ஒப்படைக்க போவதில்லை என, ஐ.தே.க உறுதி பூண்டது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு சென்று நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், கடந்த செவ்வாய்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியினர் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு மைத்திரிபால சிறிசேன தற்போது தீர்மானித்திருக்கின்றார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்காவின் தற்போதைய குழப்பகரமான அரசியல் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு, மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற, மாவட்ட அமைப்பாளர்களுக்கான கூட்டத்தின்போது, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments

Latest Articles