Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கொழும்பு சென்ற தமிழ் இளைஞரைக் காணவில்லை; பரிதவிக்கும் உறவினர்கள்!

முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இலக்கம் 67, பாலி நகர், வவுனிக...





முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இலக்கம் 67, பாலி நகர், வவுனிக்குளம் முல்லைத்தீவுத்தைச் சேர்ந்த 21 வயதான குகதாசன் உமேஷ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 31ஆம் திகதி (31.10.2018) அன்று கொழும்புக்குச் செல்வதாக இரவு 7 மணிக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என கூறப்பட்டுள்ளது.

மறு நாள் காலை அவரது தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அவரது தொலைபேசி செயலிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முரைப்பாடு மேற்கொள்ளபட்டுள்ளது.

இவர் தொடர்பாக தகவலறிந்தவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்

ليست هناك تعليقات

Latest Articles