Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மயிரிழையில் உயிர் தப்பிய வயோதிபர் - வடமராட்சியில் சம்பவம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து வாள்வெட்டுக்கும்பல் ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. ...



யாழ்ப்பாணம் வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து வாள்வெட்டுக்கும்பல் ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்த வாள்வெட்டுக்கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி வர்த்தகநிலையத்தை அடித்து நொருக்கியதோடு அங்கிருந்தவர்களை வெட்டி காயப்படுத்தியுள்ளது.


முகமூடிகளை அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் இந்த அட்டகாசத்தில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டுள்ளனர்.

வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்தவர்களையும் வாள்கொண்டு அச்சுறுத்தியுள்ளனர்.

இந்தக் கும்பலின் அட்டகாசங்கள் அங்கிருந்த சீ.சீ.ரீ.வீ கமராவில் பதிவாகியுள்ளது.

இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ليست هناك تعليقات

Latest Articles