Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட சின்மயி ; காரணம் யார் தெரியுமா!

தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து மீது தொடர்ச்சியாக பல பாலியல் புகார்களை தெரிவித்துவந்த பாடகி சின்மயி விவகாரம் தமிழ் சின...



தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து மீது தொடர்ச்சியாக பல பாலியல் புகார்களை தெரிவித்துவந்த பாடகி சின்மயி விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தினை பரபரப்பாக வைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளார் சின்மயி. அதற்கான காரணம் அவர் டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதுதான்.

தான் 2 வருட சந்தா கட்டணம் செலுத்தாததால் தகவல் தெரிவிக்காமலேயே தம்மை சங்கத்திலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ள சின்மயி, டப்பிங் சங்கத்தின் தலைவராக உள்ள ராதாரவி மீதும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டியுள்ளார்.

டப்பிங் சங்கத்தில் உறுப்பினராக ராதாரவி சுமார் 5 லட்சம் ரூபாய் கேட்பதாகவும், ஆளுக்கு ஏற்றார்போல் தன்னிச்சையாக கட்டணம் வசூலிப்பதாகவும் சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். டப்பிங் சங்க தலைவராக உள்ள நடிகர் ராதாரவி, தம்மை டப்பிங் செய்ய விடப்போவதில்லை என்று ஏற்கனவே கூறியிருந்ததையும் குறிப்பிட்டு இனி தம்மால் டப்பிங் பணிகளில் ஈடுபட முடியாதெனவும், அதற்கு காரணம் ராதாரவி தான் என்ற ரீதியில் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ليست هناك تعليقات

Latest Articles