இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே, நேற்றைய தினம் அந்நாட்டு தற்போதைய அதிபர் சிறிசேனா முன்னிலையில் இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக்கொ...
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே, நேற்றைய தினம் அந்நாட்டு தற்போதைய அதிபர் சிறிசேனா முன்னிலையில் இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அதே சமயம், இலங்கையின் அரசியல் சட்டத்தின் படி ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது செல்லாது எனவும், தாமே பிரதமராக தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார் சிறிசேனாவால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே.
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் இந்தியாவிலும், தமிழகத்திலும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளன.
இந்த நிலையில், ராஜபக்சே இலங்கையின் பிரதமராக பதவியேற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் டி. ஆர் ராஜாவின் மகனும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான ராஜா, "டெல்லியின் முழு ஆசீர்வாதத்துடனேயே இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவிற்கு வருகை புரிந்திருந்த ராஜபக்சே ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இலங்கையின் அபிவிருத்தி பணிகளில் தொடர்ச்சியாக இந்தியாவின் பங்களிப்பு மகத்தான அளவில் இருந்துவருகிறது. நான் இந்தியாவுடன் இணக்கமாகவே செயல்பட விரும்புகிறேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments