Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளன சுற்றுப்போட்டி கிண்ணம் யங்கென்றீஸ் வசம்…..

தொடர்ந்து இரண்டாவது கிண்ணத்தை சுவீகரித்த யங்கென்றீஸ் அணி....    வலிகாமம் லீக்கின் அனுசரணையில் பிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம...


தொடர்ந்து இரண்டாவது கிண்ணத்தை சுவீகரித்த யங்கென்றீஸ் அணி....
  
வலிகாமம் லீக்கின் அனுசரணையில் பிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று (27/10/2018) துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஞானரூபன் தலைமையிலான யங்கென்றீஸ் அணியை எதிர்த்து அகீபன் தலைமையிலான ஜயனார் அணி மோதியது.

ஆரம்பம் முதல் பரபரப்பாக நடைபெற்ற இவ் ஆட்டத்தில் 03:00 என்ற கோல் கணக்கில் யங்கென்றீஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.

யங்கென்றீஸ் அணி சார்பாக ஞானரூபன்,  தனேஸ் , சுபிதாஸ் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று பெற்று கொடுத்தனர்.

இப்போட்டி ஆட்டநாயகனாக சுபிதாஸ்  தெரிவு செய்யப்பட்டார்.

இறுதியாக நடைபெற்ற வாலிபர் சுழல் கிண்ணத்தையும் யங்கென்றீஸ் அணி கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

யங்கென்றீஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

ليست هناك تعليقات

Latest Articles