சிறிலங்காவின் முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளதை அடுத்து கொழும்பு அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் இடம்பெற...
சிறிலங்காவின் முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளதை அடுத்து கொழும்பு அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மஹிந்தவின் பதவிப் பிரமாணம் தொடர்பான செய்திகளை வெளியிடாது இருந்த சிறிலங்கா அரசின் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தொடர்பில் மஹிந்தவாதிகள் கடும்ஆத்திரமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் ரூபவாஹினி உட்பட அரச ஊடகங்களை உடனடியாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக மஹிந்தவாதியான கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கேஹேலிய ரம்புக்வெல்ல பகிரங்கமாக சூளுரைத்திருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகி ஒருசில மணித்தியாலங்களுக்குள் ஏராளமான ஆதரவாளர்களுடன் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்த கேஹேலிய உட்பட மஹிந்த விசுவாசிகள் ரூபவாஹினியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கூச்சலிட்டவாறு மஹிந்தவின் ஆதரவாளர்கள் ரூபவாஹினிக்குள் நுழைந்ததால் அங்கிருந்த பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பணியாளர்கள் ஆகியோர் செய்வதறியாது நாலாபுரமும் தலைதெரிக்க ஓடினர். இதனால் சுமார் ஒரு மணித்தியாலமாக ரூபவாஹினி ஒளிபரப்பு சேவை முடக்கப்பட்டிருந்தது.
எனினும் பின்னர் ஒளிபரப்பு சேவை வழமைக்குத் திரும்பியதை அடுத்து முதலாவது செய்தியாக மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற செய்தி ஒளிபரப்பப்பட்டதுடன், மஹிந்தவைபுகழ்பாடிய நேரடி நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன.



No comments