வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு ஜந்து பேர்களை கொண்ட கும்பல் வீட்டினுள் புகுந்து அங்கிருந்த தாயைய...

வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு ஜந்து பேர்களை கொண்ட கும்பல் வீட்டினுள் புகுந்து அங்கிருந்த தாயையும், மகளையும் தாக்கியதுடன் அங்கிருந்த தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், வீட்டின் யன்னல் கதவுகள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
மேலும் இத்தாக்குதலுக்கு இலக்காகி தாயும் மகளும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த நபர்கள் முகத்தை மூடிமறைத்துகொண்டு வந்ததுடன் தலைக்கவசமும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா நெளுக்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



No comments