Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு – பலர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி துப்பா...



அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ட்ரீ ஆஃப் லைஃப் என்ற அந்த வழிபாட்டு சபையில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணி அளவில் அவசர சேவை பிரிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் பல உயிரிழந்துள்ளதாக பிட்ஸ்பர்க் நகர போலிஸ் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு - பலர் உயிரிழப்பு தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர் போலிஸ் காவலில் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அப்போது போலிஸ் எச்சரித்தது.

நடக்கும் சம்பவங்களை தான் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ليست هناك تعليقات

Latest Articles