Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

நிம்மதியாக தூங்க வேண்டுமா?

நிம்மதியாக தூங்க வேண்டுமா? இந்த பானங்களை பருகிப்பாருங்கள்! *சீமைச்சாமந்தி டீ *வெதுவெதுப்பான பால் *பாதாம் பால் *தேன் *இஞ்...



நிம்மதியாக தூங்க வேண்டுமா? இந்த பானங்களை பருகிப்பாருங்கள்!

*சீமைச்சாமந்தி டீ
*வெதுவெதுப்பான பால்
*பாதாம் பால்
*தேன்
*இஞ்சி டீ

நல்ல வெதுவெதுப்பான நீரில் புதினாவைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து தேன் கலந்து குடித்தால், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

சீமைச்சாமந்தி டீ::

சர்க்கரை சேர்க்காத சீமைச்சாமந்தி டீயை இரவில் படுப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடித்தால், நரம்புகள் தளர்ந்து, மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.

வெதுவெதுப்பான பால்:

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடல் நன்கு ரிலாக்ஸ் ஆகி, ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

பாதாம் பால்:

பாலில் உள்ள வைட்டமின் ஈ, இரவில் இனிமையான தூக்கத்தைப் பெற உதவும். அதிலும் பாதாம் பாலை டின்னர் முடிந்து குடித்து, 1 மணிநேரம் கழித்து தூங்கினால், நன்கு தூக்கம் வரும்.

தேன்:

வெதுவெதுப்பான பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், இரவில் தூக்கம் சீக்கிரம் வருவதோடு, மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள்.

இஞ்சி டீ:

இஞ்சி டீயை இரவில் குடித்தால், உணவுகள் எளிதில் செரிமானமாகி, செரிமான பிரச்சனைகளின்றி நல்ல ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.

No comments

Latest Articles