Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இந்த வாரம் உங்களிற்கு எப்படி தெரியுமா..? – வார ராசி பலன் (27.10.2018 – 02.11.2018)

மேஷம் சூரியன் நீசம் பெற்று ராசியை பார்ப்பதால் வீண் செலவுகள், அலைச்சல் இருக்கும். பெண்களுக்கு இனம் புரியாத கவலைகள் வந்து நீங்கும். சுக்க...


மேஷம்

சூரியன் நீசம் பெற்று ராசியை பார்ப்பதால் வீண் செலவுகள், அலைச்சல் இருக்கும். பெண்களுக்கு இனம் புரியாத கவலைகள் வந்து நீங்கும். சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

சுப விஷயமாக பயணங்கள் ஏற்படும். மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு. செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு இடம் பெயர்வதால் உத்யோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். சகோதரர்களிடையே இருந்து வந்த மனக்கசப்புக்கள் மறையும். சொத்து சம்மந்தமாக நல்ல முடிவுகள் ஏற்படும். சமையலறைக்கு தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம்

சந்திரன் சாதகமாக இருப்பதால் மனநலம் சீராக இருக்கும். அக்கா, மாமாவிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். புதனின் பார்வை காரணமாக போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களிடையே செல்வாக்கு கூடும்.

நெருங்கிய உறவுகளின் சுப விசேஷங்கள் காரணமாக மொய் பணம், பரிசுகள் என செலவுகள் ஏற்படும். வண்டி வகையில் செலவுகள் ஏற்படும். வீட்டு உரிமையாளர், வாடகைதாரர்களிடையே சில பிரசனைகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கலைத்துறை, இசைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.

மிதுனம்

குரு, புதன் ஆகிய இருவரின் சேர்க்கை காரணமாக எல்லா விஷயங்களும் அனுகூலமாக நடக்கும். பணவரவுகள் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே சில மனவருத்தங்கள் வந்து நீங்கும்.

வெளியூர் விருந்தினர்களால் வீட்டில் மகிழ்ச்சி, வேலைச்சுமை, செலவுகள் வரும். ராகு 2ல் தொடர்வதால் கொடுக்கல், வாங்கலில் நிதானம், கவனம் தேவை. கிரக தோஷத்திற்கான பரிகார பூஜைகளை இனிதே செய்து முடிப்பீர்கள். கண் சம்மந்தமான கோளாறுகள் வர வாய்ப்புள்ளது. வேலையில் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். பயணத் திட்டங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

கடகம்

ராசிநாதன் சந்திரன் உச்சமாக இருப்பதால் ஆரோக்கியம், மனநலம் நன்றாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம், பாசம் கூடும். தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். செவ்வாயின் பார்வை காரணமாக செல்வாக்கு உயரும்.

சகோதரி திருமண விஷயமாக முக்கிய முடிவுகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தவர்களுக்கு கர்ப்பம் அடையும் யோகம் உண்டு. வீடு, நிலம் வாங்க இடம் பார்த்தவர்களுக்கு நல்ல வீடு அமையும். அலுவலகத்தில் வேலைச்சுமை, பயணங்கள் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். மகள், மாப்பிள்ளை மூலம் செலவுகள் ஏற்படும்.

சிம்மம்

ராசிநாதன் சூரியன் நீசமாக இருப்பதால், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நலம் தரும். தந்தையுடன் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். செவ்வாய் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். வழக்கு சம்மந்தமாக வெற்றி செய்தி வரும்.

வாடகை பாக்கி, குத்தகை பாக்கி வசூலாகும். புதன், குரு இருவரின் சேர்க்கை காரணமாக வாய் மூலம் பேசி தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவார்கள். வீடு கட்ட அரசு அனுமதி கிடைக்கும். காது, தொண்டை சம்மந்தமாக உபாதைகள் வரலாம். பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று தரிசிப்பீர்கள்.


கன்னி


ராசிநாதன் புதன், குரு இருவரின் சேர்க்கையும் பார்வையும் சாதகமாக இருப்பதால் குழப்பங்கள் நீங்கி தெளிவடைவீர்கள். பெண்கள் தாங்கள் விரும்பிய இரண்டு சக்கர வண்டி வாங்கி மகிழ்வார்கள். வீடு மாற இடம் பார்த்தவர்களுக்கு நல்ல வீடு அமையும்.

பூர்வீக சொத்து சம்மந்தமாக குடும்பத்தினரிடையே ஒருமித்த கருத்து உண்டாகும். மருமகள் கர்ப்பம் சம்மந்தமாக இனிக்கும் செய்தி வரும். 5ல் கேது தொடர்வதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில், குளம், சத்சங்கம் என்று சென்று வருவீர்கள். தொழில் சாதகமாக நடக்கும். வெள்ளி, தங்கம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

துலாம்

ராசிநாதன் சுக்கிரன் வக்கிரமாகவும், நீச சூரியனுடன் சேர்ந்து இருப்பதால் எதிலும் அவசரம் வேண்டாம். பிறர் குடும்ப விஷயங்களில் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் வேலையில் கவனம் தேவை. பிறரை நம்பி உங்கள் பணிகளை ஒப்படைக்க வேண்டாம்.

புதன் 2ல் இருப்பதால் சுப விஷயமாக நல்ல தகவல் கிடைக்கும். சொத்து, வாங்க, விற்க நேரம் கூடி வந்துள்ளது. கேது 4ல் இருப்பதால் இடமாற்றம், அலைச்சல், பயணங்கள் இருக்கும். வயிறு சம்மந்தமாக உபாதைகள் வந்து நீங்கும். மாமியார், மருமகளிடையே நல்லுறவு மலரும். விசா எதிர்பார்த்தவர்களுக்கு வாரக் கடைசியில் கிடைக்கும்.

விருச்சிகம்

ராசிநாதன் செவ்வாய் சுகஸ்தானத்தில் இருப்பதால் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைவார்கள். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வரவேண்டிய பாகப்பிரிவினை சொத்து, பணம், நகை கைக்கு வரும். குருபார்வை காரணமாக பொது அமைப்புக்கள், சங்கம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பதவி கிடைக்கும்.

இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வுக்கு யோகம் உள்ளது. கல்வி வகையில் செலவுகள் ஏற்படும். புதிய மின்சாதனங்கள் வாங்குவீர்கள். தொழில் சாதகமாக நடக்கும். வேலையாட்கள் பிரச்னை தீரும். புதிய தொழிலில் கால் பதிப்பதற்கான காலநேரம் வந்துள்ளது.

தனுசு

செவ்வாயின் பார்வை யோகம் காரணமாக உங்கள் எண்ணங்கள், முயற்சிகள் வெற்றியடையும். மகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி கிடைக்கும். குருவின்பார்வை காரணமாக பொன், பொருள் சேரும். மகன் திருமண விஷயமாக சுப முடிவுகள் வரும். சூரியன் நீசமாக இருப்பதால் அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும்.

எதிர்பார்த்த இடமாற்றம் சற்று தாமதமாகும். விருப்ப ஓய்வு பெற நினைப்பவர்கள் சாதகபாதகங்களை பார்த்து முடிவெடுக்கவும். நெருங்கிய உறவுகள் வருகையால் விருந்து உபசரிப்பு என செலவுகள் கூடும். நண்பர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.

மகரம்

வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் நிறைகுறைகள் இருக்கும். சொத்து சம்மந்தமாக நல்ல முடிவுகள் வரும். காலியாக இருக்கும் பிளாட்டிற்கு புதிய வாடகைதாரர்கள் வருவார்கள். சூரியன் நீசமாக இருப்பதால் தந்தை உடல்நலம் பாதிக்கப்படலாம். அரசாங்க விஷயங்கள் அதிக அலைச்சலுக்கு பிறகு அனுகூலமாக முடியும்.

சனி 12ல் தொடர்வதால் சுபசெலவுகள் ஏற்படும். பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். புதனின் பார்வை காரணமாக பிள்ளைகள் உங்களுக்கு அனுசரனையாக இருப்பார்கள். மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவரின் அறிமுகம் கிடைக்கும்

கும்பம்

செவ்வாய் ராசியில் இருப்பதால் திடமாக முடிவெடுப்பீர்கள். சொத்து வாங்குவது சம்மந்தமாக ஒப்பந்தங்கள் போடுவீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். கன்னிப் பெண்கள் விரும்பிய இரண்டு சக்கரவண்டி வாங்குவீர்கள்.

குரு, தன, குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத பணம் கைக்கு வரும். மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். தங்க நகை வாங்கி பரிசளிப்பீர்கள். சூரியன் நீச்சமாக இருப்பதால் நண்பர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் சற்று விட்டுக் கொடுத்து போவது அவசியம். கடல் கடந்து செல்வதற்கான காலநேரம் உள்ளது.

மீனம்

சந்திரன் சாதகமான ராசிகளில் செல்வதால் உடல்நலம், மனநலம் திருப்திகரமாக இருக்கும். வியாபார பயணங்கள் வெற்றிகரமாக அமையும். கடல் கடந்து சென்று வருவீர்கள். செவ்வாய் பார்வை காரணமாக கொடுக்கல் வாங்கல் சீராக நடக்கும். வழக்கில் சிக்கி இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள்.

சொத்து விஷயமாக சமாதான தீர்வுக்கு வாய்ப்புள்ளது. குரு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் கௌரவ பதவி, பட்டம், விருதுகள் கிடைக்கும். கோயில் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகளை தலைமை ஏற்று நடத்துவீர்கள். பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்வீர்கள்.


No comments

Latest Articles