Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு.

அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் அஹங்கம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றைய நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் 19 வயதுடைய இளைஞன் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



ليست هناك تعليقات

Latest Articles