Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இரட்டை கொலை - மேலும் 6 சந்தேக நபர்கள் கைது

மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 10 திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஆறு சந்தேக நபர்கள...

மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 10 திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஆறு சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸார் கைது செய்யப்பட்டு இன்று (22) காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.


கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர்.


குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டனர்.


இவ் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்ளையும் இன்று (22) புதன்கிழமை காலை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.


கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (22) உத்தரவிட்டார்.


இதுவரை குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






ليست هناك تعليقات

Latest Articles