Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மேம்பட்ட பிராசஸர்களுடன் விரைவில் அறிமுகமாகும் ஐபேட் ப்ரோ?

 ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டிற்கான தனது முதல் அறிமுக நிகழ்வை ஏப்ரல் மாதத்தில் நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் மேம்பட்ட பிரா...

 ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டிற்கான தனது முதல் அறிமுக நிகழ்வை ஏப்ரல் மாதத்தில் நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் மேம்பட்ட பிராசஸர், கேமரா, மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட புதிய ஐபேட் ப்ரோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.


புது மாடல்களும் 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. வெளிப்புறம் அதே வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாடலில் உள்புற அம்சங்களான பிராசஸர் மற்றும் கேமரா சிஸ்டம் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.


ஆப்பிள் சிலிகான் எம்1 சிப்செட்-க்கு இணையான செயல்திறன் வழங்கும் புது பிராசஸர் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை மினி எல்இடி பேனல் கொண்ட முதல் ஐபேட் ப்ரோ மாடலை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

 

இவைதவிர புதிய ஐபேட் ப்ரோ தன்டர்போல்ட் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஐபேட் ப்ரோ மாடலை மாணிட்டர், ஹார்டு டிரைவ் என பல்வேறு இதர சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.




No comments

Latest Articles