Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பாலுக்கு அழுத குழந்தைக்கு தந்தை செய்த வியப்பூட்டும் செயல்.

குழந்தைகளின் சேட்டைகள் மற்றும் அவர்களின் குறும்புத்தனங்களை காட்டும் வீடியோக்கள் ஆன்லைனில் அடிக்கடி வைரலாவது வழக்கமான ஒன்று. கைக்குழந்தைகளை ப...

குழந்தைகளின் சேட்டைகள் மற்றும் அவர்களின் குறும்புத்தனங்களை காட்டும் வீடியோக்கள் ஆன்லைனில் அடிக்கடி வைரலாவது வழக்கமான ஒன்று. கைக்குழந்தைகளை பார்த்து கொள்ளும் பெற்றோரின் கடமையும், பணியும் அவ்வளவு எளிதானதல்ல.

அதிலும் குழந்தைகளுக்கு பால் புகட்டுவதும், அவர்களை சாப்பிட வைப்பதும் இருப்பதிலேயே மிகவும் கஷ்டமான வேலை. அப்படிப்பட்ட வேலையை ஒரு வித்தியாசமான ட்ரிக்கை பயன்படுத்தி தனது மகளுக்கு அதிகம் பாலூட்டுகிறார் ஒரு பாசக்கார தந்தை. அந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.

மியூசிக் புரொடியூசரான ரூடி வில்லிங்ஹாம் என்பவர், தன் மகளுக்கு பால்புகட்ட விரும்பினார். இதற்கு ஏற்ப ஒரு சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான ட்ரிக்கை கையில் எடுத்தார் அவர்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள குறுகிய வீடியோவில், முதலில் பாட்டிலில் பாலை பிடித்து கொள்கிறார். பின் தனது மகளுக்கு அருகே சென்று 'பீர் போங்' (Beer Bong) எனப்படும் புனல் போன்ற ஒரு சாதனத்தின் வாய் பகுதியில் முழு பாலையும் ஊற்றுகிறார்.

பீர் போங்கின் மறுமுனையில் குழந்தை பால் குடிப்பதற்கு ஏற்ற வகையில் சிலிகான் ஃபீடிங் பொருத்தப்பட்ட ஒரு பிளாஸ்டிக் குழாய் இணைக்கப்பட்டு உள்ளது. தனது மகளுக்கு ஃபார்முலா பாலைச் சேர்த்து, குடிக்க வைக்கும் பொருட்டு பீர் போங்கின் மற்றொரு முனையில் இந்த சிலிகான் ஃபீடிங்கை இணைத்து மாற்றியமைத்துள்ளார்.


No comments

Latest Articles