Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் அரசாங்கம் வெளியிடவில்லை என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியிருக்கின்றார்.  த...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் அரசாங்கம் வெளியிடவில்லை என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியிருக்கின்றார். 

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடல் ஒன்று மாத்திமே நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் கைதிகளை விடுவிப்பதாக யார் கூறியது? கலந்துரையாடப்பட்ட போதும் விடுவிக்கப்படடவில்லையே. 

நாம் தெளிவான ஒரு நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.இந்த நாட்டில் ஏதாவது அதிகார பகிர்வு அப்படி இல்லை என்றால் மூன்றில் இரண்டு வேண்டும் என்றால் அது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளலாம்.

எனினும் இரகசிய ஒப்பந்தங்கள், அப்படி இல்லை என்றால் போலி அரசியலமைப்புகளை கொண்டு வந்து புலம்பெயர் செயற்பாட்டார்களின் தேவைக்காகவும் தமிழ் இனவாதிகளின்
அவசியத்திற்கமையவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படாதென்பதனை நாம் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கெஹேலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Latest Articles