கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படாமல் மாஸ்க் அணியாமல் வந்தால் சிறையில் தள்ளும் நடவடிக்கையை குவைத் மற்றும் கத்தார் அரசுகள் மேற்க...
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படாமல் மாஸ்க் அணியாமல் வந்தால் சிறையில் தள்ளும் நடவடிக்கையை குவைத் மற்றும் கத்தார் அரசுகள் மேற்கொண்டுள்ளன.
குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் முக கவசம் அணியாமல் வந்தால் அபராதத்துடன் 3 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக, குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம், முக கவசம் அணியாதவர்களுக்கு 3 மாதம் வரை சிறை அல்லது அதிகபட்சம் 5 ஆயிரம் தினார், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கத்தாரில் மாஸ்க் அணியாமல் வருவோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டிருப்பதாக அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது. 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



ليست هناك تعليقات