கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இன்று (மே 17) ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின்...
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இன்று (மே 17) ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று நான்கு பேர் கோரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 964ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
இதுவரை 538 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
417 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments