Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழ்.நீதிமன்ற உத்தரவோடு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 11 பேர் தனிமைப்படுத்தலில்..!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடந்த 6 நாட்களாக நடாத்திய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செய...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடந்த 6 நாட்களாக நடாத்திய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளர் கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்துமாறு யாழ்.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதன்கான கடிதம் இன்று இரவு 11 போினதும் வீடுகளுக்கு சென்று பொலிஸார் வழங்கியிருக்கின்றனர். இதன்படி தனிமைப்படுத்தப்படுபவர்களாக, 

1. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

2. பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்
3. தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
4. சட்ட ஆலோசகர் சுகாஸ்
5. சட்ட ஆலோசகர் காண்டீபன்
6. யாழ் மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன்
7. யாழ் மாநகரசபை உறுப்பினர் தனுசன்
8. யாழ் மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன்
9. விஸ்ணுகாந்
10. சுதாகரன்
11. தமிழ்மதி

 
இவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 



No comments

Latest Articles