உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அமைச்சரவை இணை பேச்ச...
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் பல அமைச்சரவை தீர்மானங்கள் குறித்தும் அமைச்சரவை இணை பேச்சாளர் கருத்து தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையில் அரசாங்கம் நட்டத்தில் மசகு எண்ணையை வழங்கி வருவதாகவும் அதனை ஈடுசெய்ய எதிர்காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.



ليست هناك تعليقات