யாழ்ப்பாணம் கொட்டடிபகுதியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். ...
யாழ்ப்பாணம் கொட்டடிபகுதியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது.
படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
3 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஏழுக்கு மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அவர்கள் பொம்மைவெளியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாக கொட்டடி இளைஞர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலையடுத்து ஊரவர்கள் துரத்திச் சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
வன்முறைக் கும்பல் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களும் கொட்டடியைச் சேர்ந்தவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



ليست هناك تعليقات