Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் இன்று (02) பிற்பகல் 1 மணிக்கு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்...

வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் இன்று (02) பிற்பகல் 1 மணிக்கு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வட மாகாண ஆளுநராக கடந்த திங்கட் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிருந்தார்.

கடந்த ஒன்றரை மாதங்களாக வடக்கு மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்து வந்த நிலையில், இவர் பதவியைப் பொறுப்பேற்றார்.

இன்றைய நிகழ்வில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள் மற்றும் இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் பொலிஸ் அணி வகுப்பு மரியாதையினையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.


-யாழ். மாவட்ட செய்தியாளர் பார்த்திபன்-

ليست هناك تعليقات

Latest Articles