Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்துக்குள் வெடிபொருட்கள் மீட்பு!

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்திலிருந்து இராணுவத்தினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...


மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்திலிருந்து இராணுவத்தினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேரியகுளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு 7 மணியளவில் வழிமறித்த இராணுவம் அவ்விடத்தில் சோதனைகளை மேற்கொண்ட போதே டைனமெற் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பேருந்தில் உரிமை கோரப்படாமலிருந்த பொதியினை பரிசோதனை செய்த போது குறித்த பொதிக்குள்ளிருந்து 51டைனமெற் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

யாரும் உரிமை கோராமையினால் பேருந்தையும், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரைம் இராணுவத்தினர் செட்டிக்குளம் பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இருவரையும் செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات

Latest Articles