எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை (03) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக...
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை (03) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபடவுள்ளது
முற்பகல் 9 மணிக்கு விருத்தினர்களின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கவிருப்பதுடன், முதலில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவின் வருகையும் இடம்பெறும்.
சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் ஜனாதிபதியை பாராளுமன்றக் கட்டடத்தின் பிரதான படிக்கட்டு வரிசையின் அருகில் வரவேற்பார்கள்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படும்.
சபையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் கோட்டை ஆனந்த பாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கள கீதம் இசைப்பார்கள்.
இதன் பின்னர் மு.ப 10 மணிக்கு ஜனாதிபதி சபா மண்டபத்துக்குள் சமுகமளிப்பார்.
அவரைத் தொடர்ந்து சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் சபைக்குள் சமுகமளிப்பார்கள்.
ஜனாதிபதி பிரதான ஆசனத்தில் அமர்ந்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 33 (2) ஆவது பிரிவில் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி சபை அர்வை 1.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவார். பாராளுமன்ற கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் பிரதமர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர் உள்ளிட்ட 600ற்கும் மேற்பட்ட சிறப்பு அதிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கலசேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்தார்.

பாரளுமன்ற செய்தியாளர் பிரியா


ليست هناك تعليقات