Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழ். பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தனை...


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த மகேந்திரம் யதுஷா ( வயது-21) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

மல்லாகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தநிலையில் இன்று மாலை இவர் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து இன்று மாலையே இவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவரது சகோதரியும் இவர்கூடவே வசித்து வருவதாகவும் அவர் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் கல்விகற்று வருவதாகவும் இன்றையதினம் அவர் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாலைவேளை வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு ஏன் வெளிச்சம் போடவில்லை என கூறிக்கொண்டு வீட்டை சென்று பார்த்தபோதே மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ليست هناك تعليقات

Latest Articles