Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மைதனாம் நிறை இரசிகர்களோடு விறுவிறுப்பான ஆட்டத்தின் மத்தியில் கிண்ணம் வென்றது ஆவரங்கால் இந்து இளைஞர்!

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் அமரர் சிவகுருநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்படும் கரப்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் 25...


இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் அமரர் சிவகுருநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்படும் கரப்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் 25-09-2019 அன்று இடம்பெற்றது. இதில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து புத்தூர் கலைமதி அணி மோதியது.

5சுற்றுக்களை கொண்ட இந்த போட்டியின் முதல் சுற்றை கடுமையாக போராடி தமதாக்கியது ஆவரங்கால் இந்து! தொடர்ந்து ஆரம்பமாகிய 2வது சுற்றில் புத்தூர் கலைமதி தமது உச்சகட்ட ஆற்றலை வெளிப்படுத்தி சுற்றை 24-25 என்ற நெருக்கமான புள்ளிக்கணக்கில் தமதாக்கினர்.

இரு அணிகளும் ஒவொரு சுற்றுக்களை தமதாக்கிய நிலையில் பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் 3வது சுற்று விறுவிறுப்புடன் ஆரம்பமாகியது! இதில் ஆவரங்கால் இந்து மிகநுட்பமான தந்திரங்கள் மூலம் கலைமதியை 22-25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

 தொடர்ந்து 4வது சுற்று ஆரம்பமான நிலையில் இச்சுற்றை வென்றே ஆகவேண்டிய இக்கட்டான நிலைக்கு புத்தூர் கலைமதி நெருக்கபட மைதானத்தில் உற்சாக குரல்கள் அதிரவைத்தன! ஆயினும் ஆவரங்கால் இந்து சற்றும் தளராமல் தமது திடத்தை தக்கவைக்க தமது முழுபலத்துடன் உச்சகட்ட சவாலை விடுத்த கலைமதி தோல்வியை தழுவியது! ஆவரங்கால் இந்து 2வது முறையாக எமது கிண்ணத்தை சுவீகரித்தது.

இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக கீரிமலை நகுலேஸ்வரா மற்றும், இளவாலை மெய்கண்டான் பாடசாலை அதிபர்களும், வலிவடக்கு பி.உ கௌரவ பிரதீபன், மற்றும் தொழிலதிபர் அன்டன் தேவராசா ஆகியோருடன் அமரர் சிவகுருநாதனின் புத்திரர் திரு கௌரிபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

முதலிடம் பெற்ற அணிக்கு ரூபாய் 12,000/= பணபரிசிலும் வெற்றி கிண்ணமும் வழங்கபட்டதோடு, 2ம் இடம் பெற்ற அணிக்கு ரூபா 8000/= பணபரிசிலும் வெற்றிகிண்ணமும் வழங்கபட்டு சிறந்த ஆட்டநாயகன்,தொடராட்ட நாயகன், சிறந்த Cover, passer ஆகியோருக்கான விருதுகளும் வழங்கபட்டது.


ليست هناك تعليقات

Latest Articles