நடப்பாண்டிற்கான வடகிழக்கு பிறீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட...
நடப்பாண்டிற்கான வடகிழக்கு பிறீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்
அண்மையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.
இறுதி நிமிடத்தில் வெற்றியை பறிகொடுத்து இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்திருந்தது நொதேன் எலைட்.
எனினும் இவ் அணி அரையிறுதி ஆட்டத்தில் களமிறங்குவதற்கு முதல் அணியின் இயக்குனரால் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் 20000/- பணப்பரிசும் & இறுதி போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை வெல்லும் பட்சத்தில் 50000/- பணப் பரிசும் ஊதியத்திற்கு மேலாக நொதேன் எலைட் குழுமத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் இவ் அணி தோல்வியை தழுவிருந்தாலும் தாம் நினைத்த படி சிறந்த ஆட்டம் வெளிப்படுத்தியதற்காக நொதேன் எலைட் குழுமத்திற்கு அரையிறுதியில் வெற்றி பட்சத்தில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொகை ஊக்க தொகையாக வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனரின் அன்புச்செய்தி சுருக்கம்…
உங்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டிய கட்டாயம், உங்களின் கடின உழைப்பு வேண்டியே, சன்மானம் அறிவித்தோம். வெற்றி தோல்வியை தாண்டி உங்கள் உழைப்பிற்கும், கடின முயிற்சிக்கும் நாம் தலை வணங்குகிறோம். வடக்கின் உதைபந்தாட்டத்தில் நமது பெயரை அழுத்தமாக பதித்துள்ளீர்கள்.
எமது உதைபந்தாட்டத்தை வளர்ப்பதும் ஊக்குவிப்பதும் அதனை சார்ந்து உள்ளவர்களை ஒன்றினைப்பதும் ஆகும். அதன் முயற்சியில் நாம் மிகுந்த வெற்றி கொண்டுள்ளோம்.
வெற்றி தோல்விக்கு அப்பால் நாம் எதிர்பார்ப்பது சிறப்பான ஆட்டம் ஒன்றையே.
அதற்கமைய நாம் முன்னர் அறிவித்த ஊக்குவிப்பு தொகையை வழங்குகிறோம் உங்கள் சிறப்பான ஆட்டத்திற்கும் அர்பணிப்புக்கும் சன்மானமாக.
இயக்குனரின் இவ் முயற்சிக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்து நிற்ப்பதோடு தொடர்ந்து இவரது பணிகள் தொடரவும் வாழ்த்தி நிற்க்கிறோம்.



ليست هناك تعليقات