Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் பொலிஸ் நிலையத்தில் வைத்து இளைஞன் சித்திரவதை செய்து கொலை; எதிரி சுகவீனத்தால் உயிரிழப்பு!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றம்சுமத்தப்பட்ட முன...


சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றம்சுமத்தப்பட்ட முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாரில் 5 ஆவது எதிரி சுகவீனம் காரணமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.

5 ஆவது எதிரியின் இறப்புத் தொடர்பில் உரிய சான்றிதழ்கள் கிடைக்கப்பெறவில்லை. அதனால் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து 5 ஆவது எதிரியை நீக்கிய திருத்திய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அரச சட்டவாதி அனுமதி கோரினார்.

அதற்கு அனுமதியளித்த மேல் நீதிமன்றம், வழக்கை வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

இந்த வழக்கை விசாரிப்பதற்கு வேறொரு நீதிபதியை நியமிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் தலைவரான பிரதம நீதியரசருக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

திசாநாயக்க முதியன்சேலாகே சின்தக நிஷான்த பிரியபண்டார, ராஜபக்ச முதியன்சேலாகே சங்ஜீவ ராஜபக்ச, கோன்கலகே ஜயன்த மற்றும் ஞானலிங்கம் மயூரன் ஆகிய நான்கு எதிரிகளையும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மன்றில் முற்படுத்தினர்.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.

இதன்போதே 5 ஆவது எதிரியான வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறைச்சாலையில் உயிரிழந்தார் என்று ஏனைய எதிரிகளால் மன்றுக்குத் தெரிவிக்கப்பட்டது.

5 ஆவது எதிரியின் இறப்புத் தொடர்பில் எந்தவொரு ஆவணமும் கிடைக்கப்பெறவில்லை. 5 ஆவது எதிரியின் இறப்பை உறுதிப்படுத்தி அவரை குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்கி திருத்திய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மன்று அனுமதியளிக்கவேண்டும்.

இந்த வழக்கை மூத்த சொலிஸ்டார் ஜெனரல் குமாரரட்ணம் நெறிப்படுத்துவார். அவர் மன்றில் முன்னிலையாக தவணை வழங்கப்பட வேண்டும் என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார்.

அதற்கு அனுமதியளித்த மேல் நீதிமன்றம் வழக்கை வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

ليست هناك تعليقات

Latest Articles