Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் மாநாடும் முத்தமிழ் சங்கமும்

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் 5ஆவது இந்து மாநாடும் முத்தமிழ் சங்கம நிகழ்வும் நாளை 2019.08.18ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு ...



சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் 5ஆவது இந்து மாநாடும் முத்தமிழ் சங்கம நிகழ்வும் நாளை 2019.08.18ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து சைவப் பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகி கூட்டுறவு மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில்  சைவச்சான்றோர்கள்  கெளரவிக்கப்படவுள்ளனர்.

மேலும் சைவசமயச் செயற்பாட்டில் தம்மை அர்ப்பணித்து முன்மாதிரியாக செயலாற்றும் நல்லாசான்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயர் விருதாகிய "சைவவித்யாபிமாணி"  விருதும் வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளது.

மேலும் கல்வி புகட்டல் செயற்பாட்டில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஆசான்களுக்கு வழங்கப்படும் "வித்யாபதி" விருதும் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளனர்.

மேற்படி நிகழ்வில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சான்றோர்கள், தென்னிந்திய குரு மகாசன்னிதானங்கள், ஈழத்து ஆதீன குரு முதல்வர்கள் உள்ளிட்ட பல்தரப்பட்ட அறிஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளமையும், முத்தமிழ்ச் சைவ நிகழ்வுகள் அரங்கை அலங்கரிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அனைவரையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
















No comments

Latest Articles